பொத்துவிலுக்கு கல்வி வலயமும், கல்முனைக்கு மற்றுமொரு கல்வி வலயமும் - அமைச்சரவை அங்கீகாரம்

பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட் - 
ம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயமும், கல்முனைக்கு மற்றுமொரு மேலதிக கல்வி வலயத்தையும் நிறுவ கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச்சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (22) தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

கிழக்கு மகாண சபையின் அமைச்சரவைக்கூட்டம் நேற்று (21) மாலை கிழக்கு மகாண சபையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை அடுத்து குறித்த இரு கல்வி வலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறினார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச கல்வியில் இன்று நாம் அதிக அக்கறை மேற்கொண்டு வருகின்றோம் அதுபோல் கல்முனைக்கும் இன்னுமொரு கல்வி வலையத்தை அமைப்பது இன்றைய காலத்தின் தேவையை அறிந்து இதனை முழுமையாக அங்கீகரித்து இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். 

குறித்த இரு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் தங்களின் கல்வியை கற்கின்றனர். இதன் மூலம் அங்குள்ள கல்விச்செயற்பாட்டில் அதிக இடர்பாடுகள் காணப்படுவதால் அதனை அவசரமாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை இன்றிலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்ற கூற்றை சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியதாகவும், அதுபோல் பொத்துவிலுக்கு தனியானதொரு கல்வி வலையம் இல்லாததால் அந்த பிரதேசத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும் பல இன்னல்களை மேற்கொண்டுவருகின்ற விடயத்தினையும் தான் சுட்டிக் காட்டியதாகவும் கூறினார். 

கோமாரி, தாண்டியடி, உலனுகே பிரதேசமும், லஹூக்கல, பாணம போன்ற பிரதேச சபைகளில் உள்ள பாடசாலைகளுடன் இன்னம் பல பிரதேச நண்மைபெருவார்கள். அது போல் தான் கல்முனைக்கும் ஓர் இன்னொரு தனியான கல்வி வலையம் அவசியமாக தேவைப்படுகின்றது இந்த கல்வி வலையம் மூலம் பல பிரதேசங்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் இலகுவாக இருக்கும்.

மேலும், இதனை நாம் பலதடவைகளை கல்வி அமைச்சரிடமும், கல்வி அதிகாரிகளிடமும் எத்திவைத்தோம் இதனை பிரேரணையாக கொண்டுவந்து அதற்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொடுத்து அதனை அமைப்பதற்று நடவடிக்கை மேற்கொண்டமைக்கு கலவியமைச்சருக்கும், கிழக்கு மாகாண முதலமைசருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதகாவும் அவர் மேலும் தெரிவித்ந்தார். 

இது பற்றி கல்வி அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணையில் அதன் அவசியத்தை எடுத்துறைத்து பின் இவ் அமைச்சரவையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹபீஸ் நஸீர் அஹமட்டுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் ஆகியோர் குறித்த விடையத்தை ஆமோதித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -