குருநாகல் மாவட்டத்தில் மழைவேண்டி விசேட தொழுகையும் பிரார்த்தனையும்..!

இக்பால் அலி-
ழை தடைப்படக் கூடிய காரணங்களை சமுதாயத்திலிருந்து இல்லாமற் செய்யாமல் மழையைப் பெற்றுக் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் அருள் எமக்கு கிடைக்க வேண்டும் எனில் நாங்கள் அதிமாக நன்மைகள் செய்ய வேண்டும். தீமைகளை இல்லாமற் செய்ய வேண்டும். தீமைகள் அழிக்கப்பட்டு நன்மைகள் அதிகரித்தால் அல்லாஹ்வின் அருள் மழை நிச்சயம் கிடைக்கும். அதனை நாங்கள் சரியான முறையில் பெற்றுக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். என்று ஜமாஅத் அன்சாரினஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் இந்நாட்களில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக மழைவேண்டி தொழும் விசேட தொழுகையும் கூட்டுத் துஆப் பிரார்த்தனையும் பறகஹதெனிய தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று 22-09-2016 நடைபெற்றது. அந்நிகழ்வில் தொழுகையை நடத்தி விசேட கூட்டுத் துஆப் பிரார்த்தனையிலும் மார்க்கச் சொற்பொழிவினையும் நிகழ்த்திய ஜமாஅத் அன்சாரினஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

பொதுவாக அல்லாஹ்வுடைய அருள் இருக்க வேண்டும் எனில் நாங்கள் அதிகமாக நன்மைகளில் ஈடுபட வேண்டும். தீமைகள் குறைந்து விட்டால் அல்லாஹ்வின் அருள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றுதான் ஈஸா ( அலை) அவர்களின் வருகை இருந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வந்தால் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை முற்று முழுதாக சமுதாயத்தில் நிலை நாட்டுவார்கள். எந்தவொரு குறைவுமின்றி நீதி நேர்மையுடன் நிலைநாட்டுவார்கள். அவ்வாறு நிலை நாட்டப்படும் காலத்தில் பூமி படைக்கப்பட்ட காலத்தில் எவ்வாறு செழிப்பாக இருந்ததோ அன்றைய காலத்தில் பூமியும் செழிப்பாகிவிடும். 

ஆனால் எப்போது தீமைகள் அதிகரிக்கின்றதோ அப்போது அல்லாஹ்வின் அருள்களெல்லாம் குறைந்து விடும். மழை தடைப்பட்டு விடும். எப்போது சமுதாயத்தில் தீய செயல்கள் அதிகரிக்கின்றதோ பாவச் செயலகள் அதிகரிக்கின்றதோ அப்போது அல்லாஹ் அருள் குறைந்து விடும். அல்லாஹ்வின் மழை தடைப்பட்டு விடும். அல்லாஹ் எமக்குத் தந்து கொண்டிருக்கின்ற அருட்கொடைகளை குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி விடுவான். இது பொவான கருத்தாகும். 

அல்லாஹ் பயபக்தியுடன் வாழும் மக்களுக்காக வானத்தின் வாசலைத் திறந்து வைத்திருக்கின்றான். அந்த அருள் எங்களுக்கு கிடைக்க வேண்டும் எனில் நாங்கள் ஈமான் உடையவராக இருத்தல் வேண்டும். நாங்கள் உண்மையான பயபக்தி உடைய மக்களாக மாற வேண்டும் எம்மிடையே பாவச் செயல்கள் ஒழிக்கப்பட வேண்டும். நன்மைகள் அதிகரிக்கப்பட வேண்டும். அல்லாஹ்வை நம்பி அவனை நாடி நிற்கக் கூடிய தன்மை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் அருள் எங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். 

நாங்கள் செய்யும் தீமைகள் காரணமாக வானத்திலிருந்து கிடைக்கக் கூடிய மழை பெய்யாமல் தடைப்படுதவற்கு மிக முக்கியமாக இருந்து கொண்டிருப்பது ஈமானின் பலவீனமாகும். ஈமானின் பலவீனம், பாவச் செயல்கள் என்பதே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. மழை பெய்ய வேண்டும் எனில் நாங்கள் ஈமானில் உறுதியுடையவராக இருத்தல் வேண்டும். எமது ஈமானைப் பலப்படுத்த வேண்டும் எமது நன்மைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தீமைகளிலிருந்து விடுபட வேண்டும். எம்மை நாம் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பூமியில் நல்ல செயற்பாடுகள் இல்லாமையினால் தான் அல்லாஹ்வுத ஆலா வரட்சி போன்ற சோதனைகளை எமக்கு வழங்குகின்றான். நாங்கள் ஒவ்வொருவரும் தனிமையில் அமர்ந்து அழுது அழுது சிந்திக்க வேண்டிய விடயம் நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தைத் தொட்டுப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வுக்கு எந்தளவுக்கு வழிப்பட்டவனாக இருந்து கொண்டிருக்கின்றோம். எந்தளவுக்கு அல்லாஹ்வுக்கு மாறு செய்தவனாக இருந்து கொண்டிருக்கின்றோம் என்று. எமது மத்தியில் காணப்படும் கலாசாரச் சீரழிவுகள, தீமையான காரியங்கள் தடுக்கப்படாமல் இந்த பூமியில் அருளை நாங்கள் எதிர்பார்க்க முடியாது. 

வானத்திலிருந்து பெய்யக் கூடிய மழை எதிர்பார்க்க முடியாது. எனவே நாங்கள் காவத்திலிருந்து விடுபட வேண்டும். எம்மை தூய்மைப்படுத்த வேண்டும் அல்லாஹ்வின் பக்கம் மீள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதில் கணிசமாளவு பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -