ஸலாம் சொல்லி ஐ.நா.வில் உரையற்றிய ஜனாதிபதி..!

யுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தைகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை ஆரம்பித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை நிகழ்த்தினார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 

இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் உருவாகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை மக்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்துடான வாழ்க்கை முறையினை மாற்றியுள்ளது. அத்துடன், மக்களுக்கு வேண்டிய சுகந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையினை உலகில் உள்ள மிகவும் சந்தோசமான நாடுகளினுள் ஒன்றாக மாற்றி மக்களுக்கு கையளிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

இதேவேளை, இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இக் கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -