கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தவை..!

பைஷல் இஸ்மாயில் -
ஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் 'ஈதுல் அழ்ஹா' எனப்படும் தியாகத் திருநாளை கொண்டாடும் வேளையில், உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் எதிர்நோக்கப்படும்சவால்களுக்கு துணிச்சலோடு முகம்கொடுத்து அவற்றை முறியடித்து வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுவோமாக' என்று கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்ராஹீம் நபி அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக உலக முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு தொகையை இறை வழியில் செலவழித்தும்புனித மக்கா நகரிற்குச் சென்றும் இறை வழிபாடுகளில் ஈடுபடுவதன் பிரதான நோக்கம் இறை நேசத்தையும் இறைபொருத்தத்தையும் பெற வேண்டும் என்பதற்காகவேயாகும்.

இன, மத, நிற, குல பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றப்படும் இப்புனித கடமையினை, இஸ்லாம் சர்வதேச மாநாடாகவும் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் இஸ்லாத்தில் கடும் போக்கிற்கோ, இனவாதத்திற்கோ இடம் இல்லை என்பதனையும் இந்த தியாகம் எடுத்துக்காட்டுகிறது.

சமூக ஒற்றுமைக்காக அனைவரும் சகோதர மனப்பாங்குடன் ஒன்றிணைந்து மனிதத்துவத்தை உலகில் நிலைநாட்டுவதற்காக புனித மக்கா நகரில் பிரார்த்தனையில் ஈடுபடும் ஹஜ்ஜாஜிகளுக்கு சக்தியும், உடல் ஆரோக்கியமும்கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதுடன் இன்றைய தினம் “ஈதுல் அழ்ஹா” புனித ஹஜ்ஜூப் பெருநாளைக்கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித தியாகத் திருநாளாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

இந்த நன்னாளில் எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் எவ்வித அச்சமுமின்றிசுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் எனப்பிரார்த்திப்பதோடு, இந்த நன்னாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனியஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -