பாறுக் ஷிஹான்-
யாழ். பல்கலைகழக முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாக தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளரும் சமூக சேவகருமான ரொசான் தமீம் தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றைய இத்தாக்குதலினால் எழுந்துள்ள பதற்ற நிலை தொடர்பாக முஸ்லீம் மாணவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் சகோதரத்துமாக கல்வி கற்று வரும் இவ்வேளையில் அதை விரும்பாத தீய சக்திகள் இவ்வாறான அநாகரீகமான செயலில் ஈடுபட்டு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றமை ஏற்கமுடியாது.
எமது மாணவர்கள் இந்த நிலைமையில் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். இத்தாக்குதல் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் உரையாடியுள்ளேன்.அவர்களும் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட போதிலும் இதுவரை 3ஆவது தடவையாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை வீண் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
எனவே இச்சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணை மேற்கொள்ள பல்கலை நிர்வாகத்திற்கு பொறுப்புள்ளது.தாக்குதலhளிகளை இணங்கண்டு அவர்களுக்கான உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே எமது முஸ்லீம் மாணவர்கள் அமைதியுடன் இருக்குமாறு அவர் மேலும் குறிப்பிட்டார். தற்போது தொழுகையை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர் கொள்ளும் மாணவர்கள் மாற்று ஏற்பாட்டை செய்து கொடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை அவர் கேட்டுள்ளார்.
மேலும் இப்பல்கலைக்கழகத்தில் தற்போது வரை 650 மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் இப்பல்கலைக்கழககத்தில் கல்வி கற்று வருவதுடன் இவர்களுக்கான நிரந்திர பள்ளிவாசல் இதுவரை அமைத்து கொடுக்கப்படாமல் நிர்வாகம் பாராபட்சமாக நடந்து கொண்டு வருகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.