அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு போட் சிட்டி சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்களினால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் ”சீன நகரம்” என எழுதப்பட்டிருந்தது. ஆயுள் பூராவும் சீனாவுக்கே போட் சிட்டி சொந்தமாக எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது. சீன நாட்டுப் பிரஜைகள் இங்கு வந்து குடிபெயா்ந்து இந்த சிட்டியில் வாழ்ந்தற்கும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவா்களுக்கு இந்த நாட்டில் உள்ள தேரத்லில் கூட வாக்குரிமை அளிக்கும் உரிமையிருந்தது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பதவிக்கு வந்தனாலேயே அவ் ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு 99 வருடத்திற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அந் நகரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானதாகும். என அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா்.
இன்று (15) ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சா் பைசா் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தாா். இந் ஊடக மநாட்டில் அமைச்சா்களான சந்திம வீரக்கொடி., விஜித்தமுனி சொய்சா ஆகியோா்கள் கருத்து தெரிவித்தனா்.
இங்கு தொடா்ந்து கருத்து தெரிவித்த - அமைச்சா் பைசா் முஸ்தபா -
ஸ்ரீ.ல.சு கட்சி சாதாரண மக்களைக் கொண்டதொரு கட்சியாகும் , இக் கட்சியின் மக்களின் அபிலாசைக்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னுரிமை வழங்குகின்றாா். வற் வரி சம்பந்தமாக சாாதாரண மக்களது நிலைப்பாட்டை அறிந்து ஜனாதிபதி நிதியமைச்சா், அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் நானுமாக இணைந்தே வற் வரி திருத்தச் சட்டம் திருத்தப்படுகின்றது. ஜ.தே.கட்சியின் 70வது மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டதையிட்டு சிலா் குறை கூறுகின்றனா்.
இந்த அரசு உருவாக்கப்பட்டது இரண்டு கட்சிகளும் இணைந்தேயாகும். ஆகவே இந்த அரசாங்கம் தொடாந்து மேலும் 6 வருடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இவ் ஆட்சி ஒரு நல்லாட்சியாகும். எமது ஜனாதிபதி தமது சகல அதிகாரங்களையும் கலைந்து அதனை பாராளுமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளாா். ஆனால் முன்னாள் ஜனாதிபதியானவா்கள் ஜனாதிபதிக் கதிரையில் அமாந்து கொண்டு 70 வீதமான சகல அதிகாரங்களையும் தாமே மேற்கொண்டனா். ஆனால் இந்த ஜனாதிபதி அவ்வாறாக அதிகாரங்களை வைத்துக்கொள்ள ஒருபோதும் விரும்பவில்லை.
இங்கு உரையாற்றிய அமைச்சா் சந்திம வீரக் கொடி - தற்போழுது பெற்றோலியக் கூட்டுத்தபாணம் 46.5 வீதத்தில் இலாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. அத்துடன் மன்னாாில் என்னை வளம் உள்ளதை இந்திய அரசின் உதவியுடன் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
அமைச்சா் விஜயமுனி சொய்சா - மகிந்த ராஜபக்ச வின் ஆட்சியில் நான் சூழல் வன ஜீவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் எனது அமைச்சின் சகல செய்றபாடுகள் யானை வராமல் மின்சார வேலியமைப்பது பாடசாலைகளில் கழிவரைகள் கட்டுவதையும் முன்னாள் அமைச்சா் பசில் ராஜபக்சவே நிதி ஒதுக்கி அவா்களே மேற்கொண்டனா். நாங்கள் பெயரளவிலேயே அமைச்சராக இருந்தோம் எனத் தெரிவித்தாா்.