யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் யாழ் முஸ்லீம்களை சந்தித்தார்..!

பாறுக் ஷிஹான்-
நாட்டின் இனங்களுக்கிடையிலான நட்புறவுகள் சமத்துவம் போன்ற செயற்பாடுகளுக்கு பொலிஸ் திணைக்களம் சார்ந்த அதிகாரிகள் சிறந்த பங்களிப்பினை வழங்குவதால் மக்களின் பணிகளை நாங்கள் எதிர்காலத்தில் சிறந்த முறையில் முன்னெடுப்போம் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்தார்.

இலங்கையின் 150 பொஸிஸ் தின முன்னிட்டு நாட்டின் சமாதானத்தின் ஒற்றுமையினை நிலைத்திருக்கவேண்டி சமய வழிபாடு யாழ்ப்பாண முஸ்லீம் மக்களுடனான சந்திப்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (4) காலை சிவலைப்பள்ளிவாசலில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட சர்வமதத்தலைவரின் தலைவர் மௌலவி எம்.எம். ஆஸிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வாறான மக்கள் நல சந்திப்புகள் தொடர்பாடல்களையும் மக்களின் கட்டமைப்பினை உருவாக்க எமது உதவுகிறது. இது இன்று நாட்டின் முன்னேற்றத்தின் தேவை. இவ்வாறான செயற்பாடகள் மூலம் தான் மக்களின் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கின்றது. நாட்டில் ஜாதி மத இன பேதம் இல்லாமல் எமது பொலிஸார் கடமைகளை செய்வார்கள் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் கடத்தல்கள் குற்றங்களை நாங்கள் தடுத்துள்ளோம். அதற்கு மக்களின் பங்களிப்பும் ஊடகங்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. எனவே தான் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன் போது ஐனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நல்லாசி வேண்டியும் துஆப்பிராத்தனையும் இதில் இடம்பெற்றன. இதில் யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதேச பொலிஸ் அதிகாரிகள் முஸ்ஸிம் மக்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -