அஸ்லம் எஸ்.மௌலானா-
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை நிந்தவூர் அல்-அஷ்ரக் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அமீர் அலி விசேட பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் செயலாளர் பொறியியலாளர் நியாஸ் ஏ.சமத் அறிமுகவுரை நிகழ்த்தியதுடன் டாகடர் எஸ்.நஜிமுதீன், விரிவுரையாளர் எம்.எம்.பாஸில், கரைவாகு வரலாற்று ஆய்வாளர் எச்.எம்.அலியார் ஆகியோர் சில ஆலோசனைகளை முன்வைத்து கருத்துக்களை தெரிவித்தனர்.
அத்துடன் மர்ஹூம் அப்துல் காதர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய "போராட்ட சிந்தனைகள்" எனும் நூலின் பிரதிகள் இதன்போது விநியோகிக்கப்பட்டது.
இதில் மூத்த எழுத்தாளர்களான ஹசன் மௌலானா, மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், எம்.எம்.எம்.நூறுல் ஹக், சிராஜ் மஸ்ஹூர், பாலமுனை பாறூக், எஸ்.எல்.மன்சூர், கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், டாகடர் எம்.ஐ.எம்.ஜெமீல் உட்பட கல்வியியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள். எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.