காரமுனை மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்..!

ட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை - கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதியின் மியான்குள சந்தியிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிராமமே காரமுனை மீள்குடியேற்ற கிராமமாகும். இக்கிராமத்தில் குடியிருந்த மக்கள் கடந்தகால யுத்தத்தினால் தங்களது உடமைகளை இழந்தவர்களாக தங்களது உயிர்களை மாத்திரம் காப்பாற்றிக்கொள்வதற்காக இக்கிராமத்தை விட்டு வெளியேறினர். பின்னர் யுத்தம் நிறைவுற்ற நிலையில் இக்கிராமத்தில் வசித்த மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறி வரும்நிலையில் இக்கிராமத்தில் தற்போது 22 குடும்பங்களே தங்களுக்குரிய எதுவித அடிப்படை வசதியியுமின்றி நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.

இம்மக்களின் துயரங்களை கண்டறிவதற்காக காரமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையின் அழைப்பின்பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் முதன்முதலாக 2016.03.30ஆந்திகதி இக்கிராமத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். அத்தோடு, அங்கு குடியிருக்கும் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகவும், பல வருட கோரிக்கையாகவும், கட்டாயத் தேவைப்பாடாகவும் காணப்பட்ட மின்சார இணைப்பினை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாண்புமிகு பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரது வழிகாட்டலில் 1 கோடி 86 இலட்சம் ரூபா செலவில் தனது முயற்சியினாலும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பூரண ஒத்துழைப்புடன் 2016.09.02ஆந்திகதி மின் இணைப்பினை பெற்றுக்கொடுத்து இக்கிராம மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்.

மேலும் இக்கிராம மக்கள் முன்வைத்த மற்றுமொரு கோரிக்கைகளில் ஒன்றான பிரதான வீதியிலிருந்து காரமுனை கிராமத்திற்குச் செல்லும் வீதியானது குண்றும் குழியுமாக மக்கள் நிம்மதியாக பயணிக்க முடியாத நிலையில் 5 கிலோமீட்டர் தூரமுடைய வீதியினை தனது முயற்சியினால் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் உதவியுடன் 2016.09.06ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) சமப்படுத்தி பொதுமக்கள் எதுவித சிரமமுமின்றி பயணிக்கும் வன்னம் சமப்படுத்தி தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.

இவ்வீதியால் மதுரங்கேணி, கிருமிச்சை மற்றும் பாலையடியோடை கிராமங்களுக்கு நாளாந்தம் வேலைக்குச்செல்லும் கூழித்தொழிலாளர்கள், பண்ணைத்தொழிலாளர்கள், விவசாயிகள், அரச ஊழியர்கள் மற்றும் இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் என பலர் நன்மையடைவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறுக், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை செயலாளர் S. இந்திரகுமார், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையின் தலைவருமான K.B.S. ஹமீட், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் M.T. ஹைதர் அலி, செங்கலடிப் பிரிவு மாகாண பொறியியலாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் காரமுனை ஆனைசுட்டகட்டு குளம் மற்றும் வீதிக்கு பொறுப்பான தொழிநுட்ப உத்தியோகத்தர் V. மதிகேசன், காரமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் K.L.M. அஸனார், ஏனைய நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.​



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -