அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட திம்பிரிவெவ பகுதியில் வயலுக்குள் தண்ணீர் நிரம்பிய நிலையில் காணப்பட்ட கிணற்றில் யானையும்- யானையின் குட்டியும் நேற்றிரவு (14) வீழ்ந்துள்ள நிலையில் அதனை மீட்கும் பணியில் பொலிஸாரும்- பிரதேச சபையினரும் ஈடுபட்டனர்.
திம்பிரிவெவ காட்டுப்பகுதியிலிருந்து கிராமத்திற்குள் நுழைந்து பல நாட்களாக தொல்லை கொடுத்து வந்த இந்த யானை வயலுக்குள் நிரம்பிய நிலையில் கிடந்த கிணற்றுக்குள் வீழ்ந்து குட்டியையும் காப்பாற்றிக்கொண்டு இன்று (15) காலை 11மணிவரைக்கும் கிணற்றினுள் காணப்பட்டது. அதனையடுத்து மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்க மற்றும் பிரதேச சபையின் செயலாளர் ஜுட் ராஜசிங்கம்-வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் ஜே.சீ.பீ இயந்திரத்தை பயன்படுத்தி கிணற்றை யானை ஏறும் வகையில் வெட்டி யானையையும் குட்டியையும் மீட்டனர்.