பாறுக் ஷிஹான்-
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த நிலையில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இன்று வெள்ளிக்கிழமை(2) ஆளுநர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேள பிரதிநிதிகளும் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் குறித்த மகஜரை ஆளுநரின் ஊடாக வழங்கியுள்ளனர். அத்துடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனும் அளுநர் அலுவலகத்தில் செயலாளர் நாயகத்தின் வருகையுடன் இணைந்துள்ளார்.