அஸ்மி ஏ கபூர்-
எம்.எச்.எம்.அஷ்ரப் என்கின்ற ஆளுமை எமது அடையாளம் தொடர்பில் அவரின் அரசியல் அனுகுமுறை எமக்கான அவரின் தியாகம் தொடர்பிலும் எல்லோரும் பேசுகிறோம். தலைவர் என்கிறோம். சமுக விடுதலை வீரன் என்கிறோம். ஆண்டு தோறும் கத்தமுல் குர்ஆன் ஓதுகிறோம். அவர் நினைவில் பல கோடி செலவில் விழாக்கள் நடாத்துகிறோம். ஆனால் அவர் கொள்கை தொடர்பில் நாம் கருத்தில் கொள்வதில்லை.
அவரை வைத்து கட்சிகள் நடாத்துகிறோம். பல கோடி பெறுமதி மிக்க வாகனங்களில் பயணிக்கிறோம். பல அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு சொந்தகாரர்கனோம். பல பதவிகளை அலங்கரிக்கின்றோம். அவரின் புதைகுழிக்கு மேலாக அவரின் தியாகத்தை தொலைத்திருக்கிறோம்.
இன்று அரசியல் படுகொலைகள் தொடர்பான கவனம் மிக ஆரோக்கியமாக நடந்து வருவதான முனைப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வேளையில் ஒரு சமுகத்தலைவன் தொடர்பான எந்த வித செய்தியும் இன்றி எந்த உணர்வுகளும் இல்லாத சுயநலம் பொருந்திய அரசியல் தலைமைகளும், அதனோடு இணைந்த சமுகமாகவும் நாம் இருப்பது உதட்டில் மாத்திரம் தான் அந்த தலைவனின் பாசமும் உள்ளத்தில் எதுமற்ற சமுகமாகவும் எம்மை பார்க்க கிடக்கிறது.
லசந்த எகலினகொட ஜோசப்பரராஜசிங்கம் போன்றவர்களின் மரணத்துக்கான காரணங்களும் விசாரணைளும் நடாத்தி வரும் சூழலில் ஒரு சமுக தலைவனை பற்றிய மெளனம் எதற்காக?
அந்த தலைவனை உள்ளத்துள் வைத்து பயணிப்பதாகவும் சமுகத்தின் முன் வடிக்கும் நீலிக்கண்ணீர் உண்மையானதா? விழாக்கள் நடாத்தி வியாபிக்கும் அரசியல் வியாபாரம் ஏன்?
முந்தானை ஏந்திய தாய்மாரின் பிராத்தனைகள் இரத்தம் கொதித்தெழுந்த இளைஞர்களின் எண்ணங்கள் வெறும் வெற்று சமுகமாக எம்மை விட்டு சென்றவரா எம் தலைவர். தலைவரின் மரணம் தொடர்பில் எம் சமுக நிலைப்பாடு என்ன?
தலைவரின் எண்ணங்கள் கொள்கை அவரின் கட்சி அவரின் தியாகம் எல்லாவற்றையும் புதைகுழியை தோண்டி புதைத்து விட்டோம். ஆனால் இவற்றுக்கான தீர்வு அவரின் மரணம் தொடர்பான புதைகுழியை தோண்டுகிற போதுதான் வெளிவரும்.
இக் கொலைகான பிண்ணனி இதில் புதைந்து கிடக்கும் அரசியல் நலன் இதற்கு யார் பிண்ணனிஎன்பன வெளிவர நாம் ஒருமித்த குரலில் பேச வேண்டும். அண்மையில் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் இரவுபகலாக கட்சியின் வெளியீட்டகர் பெளசரின் குறிப்பை உங்களுக்கு தருகிறேன்.
நினைவில் வையுங்கள் இனி தூசு தட்டட்டும் தலைவரின்கொலை..
தலைவர் அஷ்ரப் பின் மரணம் 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வடோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது. அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல. அதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். ,
2002 இல் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய காய் நகர்த்தலே மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும்.
ஒரு நாட்டில் ஒரு விடயத்தினை செய்வதற்கு முன், தமது நிகழ்ச்சி நிரலை தங்கு தடையின்றி நிகழ்த்த வாய்ப்பான சூழலை , சர்வதேச ஆதிக்க அரசுகள் எப்படித் திட்டமிடும், அதற்கு என்ன என்ன செய்யும் என்பதை , சமகால சர்வதேச அரசியல் தொடர்பில் அறிவுள்ளவர்கள் ஒரளவேணும் புரிந்து கொள்ளலாம்.
முஸ்லிம்களின் அரசியல் தலைவர் அஷ்ரபை அழிக்க, பிரபாகரனையும், விடுதலைப் புலி இயக்கத்தினையும் பயன்படுத்திய சர்வதேசம், பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க , மகிந்த ராஜபச்சவை பயன்படுத்தியது. பின்னர் தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்காத மகிந்தவை அதிகாரத்தில் இருந்து இறக்க மைத்திரியையும் , ஐக்கிய தேசியக்கட்சியையும் அதன் தலைவர் ரணிலையும் பயன்படுத்தியது.
தொடரும்