சை.மு.ஸப்ரி-
தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப்பணிகளை நேற்று திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து அவர்களின் குறைகளை ஆராயும் "ஒரு நாள் ஒரு கிராமம் " செயல்திட்டத்தின் போது இப்பகுதி மக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இப்பால நிர்மாணத்துக்கான நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக பாராளுமன்ற உறுப்பினரினால் மேற்கொள்ளப்பட்டன.
இப்பகுதியில் பாலமொன்று இல்லாமையால் இப்பகுதி விவசாயிகள் தமது மூலப்பொருட்கள் முடிவுப்பொருட்களை கொண்டுசெல்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர் இப்பால நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் உட்பட பொதுமக்களின் நீண்டகால குறைபாடு நிவர்த்திசெய்யப்பட்டுள்ளது.