கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயரிஸ்தானிகர் பிலோறேண்டினோ பாடிஸ்டா 10.09.2016 ம் திகதி பி.ப 05.30 மணியளவில் நிலாவெளி ஹோட்டல் பார்ம் வில்லேஜில் சந்திப்பு இடம்பெற்றத்து.
குறித்த சந்திப்பின்போது திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது. மாவட்டத்தில் வாழ்கின்ற வரிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாகவும் எடுதுக்கூறப்பட்ட போது;
தாம் மாவட்டத்தின் சுகாதார உதவிகளை வழங்க தயாராகவுள்ளதவும் மாவட்டத்தை தாம் நேரில் பார்வை இடுவதற்காகவே வருகை தந்தாகவும் குறித்த மக்களுக்கு செய்யவேண்டிய அனைத்தும் தம்மால் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்
இதுபோன்றுதான் தமது நாடு சர்வதேசரீதியில் உதவி வருவதாகவும் குறிப்பாக சிரியாவிற்கான முழு மருத்துவ உதவிகளை அதிகளவில் தாம்செய்து வருவதாகவும் தெரிவித்தார்.