ஏஎம் றிகாஸ்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் கவனயீர்ப்புப்போராட்டத்தில் 27.09.2016 ஈடுபட்டுள்ளனர். காரியாலயத்தை திறக்காமல் கல்வியதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு முன்பாக சுலோகங்களை ஏந்தி தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
இதேவேளை வலயக் கல்விப் பணிபாளரைக் கண்டித்து அலுவலக சுற்றாடலில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. வாழைச்சேனை ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு விஞ்ஞான பிரிவு ஆசிரியை ஒருவருக்கு பதிலீடு இன்றி இடமாற்றம் வழங்கிய சம்பவத்தினையடுத்து வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் மாகாண சபை உறுப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்நிலைக்கு காரணமெனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பில் கல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர் சிஎம். ஆதம்லெப்பை கருத்துத் தெரிவிக்கையில்-
வலயக் கல்வி அலுவலகத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் எம்எஸ்சுபைர் பதிலீடுஇன்றி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமை குறித்து வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வினவியுள்ளார். இதன்போது இந்த இடமாற்றம் தன்னிடம் சாத்திய அறிக்கை பெறப்படாமல் குறித்த பாடசாலை அதிபரின் சிபாரிசுக்கமைவாக மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் செய்யப்பட்டதாக வலயக்கல்விப் பணிப்பாளர் பதிலளித்துள்ளார்.
வலயக் கல்வி அலுவலகத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் எம்எஸ்சுபைர் பதிலீடுஇன்றி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமை குறித்து வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வினவியுள்ளார். இதன்போது இந்த இடமாற்றம் தன்னிடம் சாத்திய அறிக்கை பெறப்படாமல் குறித்த பாடசாலை அதிபரின் சிபாரிசுக்கமைவாக மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் செய்யப்பட்டதாக வலயக்கல்விப் பணிப்பாளர் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து மாகாண சபை உறுப்பினர் வலயக் கல்விப் பணிப்பாளரைக் கடிந்துகொண்டு தகாதவார்த்தைப்பிரயோகம் செய்ததாகவும் வலயக் கல்விப் பணிப்பாளரை அச்சுறுத்தியதாகவும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைரிடம் கருத்துக்கேட்டபோது விஷேட நிகழ்வொன்றிற்காக வாழைச்சேனை ஆயிஷா பாலிகா வித்தியாலயத்திற்கு தான் சென்றபோது உயர்தர வகுப்பு மாணவிகள் தன்னை புடைசூழ்ந்து தமது பாடசாலை ஆசிரியை ஒருவர் பதிலீடின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கடந்த ஒருமாதகாலமாக பாடம் நடைபெறுவதில்லையென முறையீடு செய்தனர்.இதுதொடர்பாக மாகாணக் கல்வியமைச்சரிடம் அறிவித்துவிட்டு வலயக்கல்விப்பணிப்பாளரைச் சந்திக்கச்சென்றிருந்தேன். அவர் தனது பொறுப்புக்கூறலை சரியாகச் செய்யாமல் பதிலளித்ததுடன் ஒருகட்டத்த்ல் தன்னை அலுவலகத்தைவிட்டு வெளியேறுமாறும் கூறினார்.
இது மக்கள் பிரதிநிதியாகிய தனக்கு கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். இதுதொடர்பில் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணையத்திலும் முறையிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.