கிழக்கு முஸ்லிம்கள் வட கிழக்கு இணைப்பு பற்றி பீதி கொள்ளத் தேவையில்லை - NDPHR

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கிழக்கு வடக்கு இணைப்பு பற்றி தனது கருத்தைத் தெரிவிக்கும் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் தன்னால் இக் காரியம் அதாவது வடக்கு கிழக்கு இணைப்பு தனது கையில்தான் உண்டு என்று கிழக்கு முஸ்லீம் மக்களை பீதியில் ஆழ்த்துவது மிகவும் கண்டிக்கப் படத் தக்கது . மேலும் நான் ஆராய்ந்து பார்த்த வகையில் இவ் வினைப்பு தேசிய மட்ட ரீதியில் தீர்மானிக்கப் படவேண்டியது என்றும் இது அமைச்சர் ஹக்கீமினாலோ அல்லது எதிர் கட்சித் தலைவர் சம்பந்தனாலோ முடியாத காரியம் என்றும் அறியக் கிடைத்தது என்று தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்.

முதலில் சம்பந்தன் ஐயா அவர்கள் எதிர்க்கட்சி தலைவரா என்ற ஒரு கேள்விக் குறியும் இங்கு எழுகிறது ஏன் என்றால் அந்த அளவுக்கு பாராளும் மன்றம் எதிர் கட்சி பலகீனம் அடைந்து கிடக்கிறது என்பதை நாம் அறியக் கூடியதாகவுள்ளது. எனவேதான் கிழக்கு முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்புக்கும் அமைச்சர் ஹக்கீமுக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டு இது ஒரு வரும் கால தேர்தலுக்கானமுஸ்லீம் காங்கிரஸின் துரும்பு என்றும் மனதில் கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் என்று தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -