ஏறாவூர் இரட்டைக் கொலை தொடர்பாக பொலிஸ் மாஅதிபருக்கு NFGG அனுப்பிய அவசரக்கடிதம்..!

டந்த 11.09.2016 அன்று ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியான பாரபட்சமற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் NFGG வேண்டுகோள் விடுத்துள்ளது.

NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று (23.09.2016) பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே NFGG சார்பாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏறாவூரில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் இதுவரை ஆறு (6) பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்னர். இப்பாரிய குற்றச் செயலோடு தொடர்புபட்ட பல தடயங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்விடயத்தில் துரிதமாக செயற்பட்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸார் பாராட்டுக்குரியவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் மிக முக்கிய நபராகக் கருதப்படுகின்ற ஒருவர் பல அரசியல் பின்னணிகளையும் ஏனைய செல்வாக்குகளையும் கொண்டவர் என்பதனால் இந்த விசாரணைகளை திசை திருப்ப அவர் முயற்சிக்கக் கூடும் என ஏறாவூர் மக்கள் சந்தேகமும் கவலையும் கொண்டுள்ளனர்.

ஏறாவூர்ப் பிரதேச சிவில் சமூக பிரதிநிதிகள் பலரும் இது தொடர்பில் தமது கவலையினை ஏறாவூர்ப் பொலிசாருக்கும் தங்களுக்கும் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளனர்.தங்களின் தலைமையில் இயங்கும் பொலிஸார் நாட்டின் ஏனைய பல குற்றச் செயல்கள் தொடர்பில் திருப்திகரமான துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதைப் போன்றே ஏறாவூர் இரட்டைக் கொலை விடயத்திலும் நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நம்புகின்றோம்.

எனவே, இவ்விடயத்தில் விசேட புலனாய்வுப் பிரிவினை ஈடுபடுத்தி நீதியான சுதந்திரமான, துரிதமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டணையை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -