ஏறாவூர் இரட்டைக் கொலை: நியாயமான அவசர தீர்வு வேண்டும் - மக்கள் கடையடைத்து அமைதிப்பேரணி - video

றாவூர் இரட்டைக்கொலை சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் ஒப்படைக்கிறார்கள். கொலைச்சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் வாதாடக்கூடாதென்றும், நீதியான விசாரணை நடைபெறவேண்டுமென்றும், ஏறாவூர் பொலிசாருக்கு நன்றி தெரிவித்தும் நீதி கோரியும் தற்போது மாபெரும் கடையடைப்பு, மக்கள் சங்கிலிப் போராட்டம் ஒன்று ஆரம்பமாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கிழக்கு முதலமைச்சர், அரசியல் பிரமுகர்கள் உட்பட எராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டுள்ளார்கள். பூரண கடையடைப்பால் ஊர் ஸ்தம்பித்ததுப் போனது. எனினும், போக்குவரத்து மற்றும் அரச காரியாலயங்கள் வழமை போன்று இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • ‘நீதித்துறையே! கொலையாளிகளுக்கு கூடிய தண்டனை கொடு, 
  • பிணை வழங்க வேண்டாம். 
  • சட்டத்தரணிகளே! குற்றவாளிகளுக்காக குரல் கொடுக்க வேண்டாம்,
  • அதிகாரிகளே! அழுத்தங்களுக்கும் பணப்பரிமாற்றங்களுக்கும் அடிபணிய வேண்டாம், 
  • அரசியல்வாதிகளே! மௌனம் கலை, 
  • அநீதிக்கு எதிராகக் குரல் கொடு, 
  • அரசே! புலனாய்வுப் பொலிஸாரிடமே விசாரணை செய்யும் பொறுப்பை ஒப்படை, 
  • துணிந்து செயற்பட்ட துப்பறியும் பொலிஸாரைப் பாராட்டுகின்றோம். 
  • நல்லாட்சியிலும் நல்லவர்கள் வாழ முடியாதா? 
என்றவாறான பல்வேறு கோஷங்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு பொதுமக்கள் வீதியில் இறங்கி மனித சங்கிலிப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இந்த ஹர்த்தால் கடையடைப்பு எந்த விதமான வன்முறைகளும் அற்ற விதத்தில் மனித சங்கிலிப் போராட்டமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -