அண்மையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும், இன்றைய வட மாகாண சபை அமர்வில் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென, குறித்த அஞ்சலி நிகழ்வை அடுத்து வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னல்ட், மாணவர்களின் கொலைச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டதோடு, அவ்வாறு நடைபெறாதவிடத்து அரச இயந்திரத்தை முடக்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.