நாத்தன்டிய பகுதியில் 10 ஆம் தர பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 15 வயது சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தினால், அருகிலுள்ள சிறுமியின் வீட்டில் தொலைக்காட்சி பார்க்க செல்லும் போது குறித்த பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இருவருக்குமிடையில் காதல் உறவு இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நேரத்தில் மயங்கி விழுந்த குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கர்ப்பம் தரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.