நாமல் ராஜபக்ஷவைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தமை தொடர்பாக பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் 100 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு செலுத்த வேண்டும் என, கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் வழக்கறிஞர் அதுல டி சில்வா, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக, வழக்கறிஞர் கணேஸ் தர்மவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
றக்பி விளையாட்டு அபிவிருத்திக்காக தனியார் நிறுவனம் ஒன்றிடம் நிதி பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் நாமல் கடந்த ஜூலை 11ம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானது என நாமல் ராஜபக்ஷ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவின் ஏழாம் இலக்க பொறுப்பதிகாரி அனுர பிரேமரத்ன மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் லலித் ஷாந்த ஆகியோரால், நாமலுக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் அபகீர்த்திக்காக, 100 மில்லியன் ரூபாவை நஸ்டஈடாக வழங்க வேண்டும் என, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.