திருகோணமலை :11 சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 2 சிறுவர்கள் கைது

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை- ஜமாலியா கடற்கரைப்பகுதியில் 11 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களான இரண்டு சிறுவர்களும் நேற்றிரவு (08) கைது செய்யப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஜமாலியா கடற்கரையில் நின்று கொண்டிருந்த சிறுவனை குழுவாக சேர்ந்து சிலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -