பேஸ்புக்கில் காதல்: கிண்ணியா பெண்ணுக்கு நடந்த கதி - 125,000 ஆயிரத்தை பறித்த இளைஞன்

எப்.முபாரக்-

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் பெண்ணொருவரிடம் பேஸ்புக்கில் காதலித்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த சந்தேக நபரை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ சனிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

பேராறு, கந்தளாய், பகுதியைச் சேர்ந்த 21வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை பேஸ்புக்கில் காதலித்து அப்பெண்ணிடம் திருமண வார்த்தைகள் கூறி ஏமாற்றி ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்து விட்டு தலைமரைவாக இருந்த நிலையில், தொடர்புகள் ஏதும் இல்லாது இருந்த நிலையிலே அப்பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட பெற்றோர்கள் மூலமாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபரை பொலிஸார் சனிக்கிழமை(29) காலையில் கைது செய்து அன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -