அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் 15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய தந்தையை நேற்றிரவு (07) 10.00மணியளவில் கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சிறுமியின் தந்தையான கிண்ணியா-இடிமன்-புதுநகர் பகுதியைச்சேர்ந்த பாருக் ரமீஸ் (40வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் வௌிநாட்டில் உள்ளதாகவும் சிறுமி தந்தையுடன் இருந்ததாகவும் பாலியல் துஸ்பிரயோகத்திற்குற்படுத்தியதாக கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்ட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சென்ற நாள் முதல் தந்தை தலைமறைவாகி இருந்ததாகவும் சிறுமி உறவினர்களின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரியவருகின்றது.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த தந்தையை நேற்றிரவு கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.