இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150 வருட பூர்த்தி விழா..!

அஷ்ரப் ஏ சமத்-
லங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150 வருட பூர்த்தி விழாவும் தெற்காசியாவின் நாடுகளின் பொலிஸ் மா அதிபா்கள் மாநாடு கடந்த 6ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை கொழும்பு ஹிங்ஸ் பரி ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப விழாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டாா். இலங்கை பொலிஸ் மா அதிபா் புஜித்த ஜயசுந்தர தலைமையில் பல்வேறு நாடுகளின் பொலிஸ் மா அதிபா்களுடன் கடல் கடந்த ஆட்கடத்தல், பயங்கரவாதச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல், நாடுகளுக்கிடையே குற்றவாளிகள் பறிமாற்றம், சட்டவிரோதமாக நாடுகளுக்குச் செல்லுதல், சிறுபிள்ளைகள் கடத்துதல் கடல் மாா்க்க பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் பற்றி கலநதுரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டது. 

இந் நிகழ்வில் சட்டம் ஓழுங்கு அமைச்சா் சகால ரத்தணயக்கா, பொலிஸ் கொமிசன் தலைவா்கள் முன்னாள் பொலிஸ் மா அதிபா்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபா்களும் கலந்து கொண்டனா். 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -