கிழக்கு மாகாணத்திற்கான 150வது பொலிஸ் தின நிகழ்வு எதிர்வரும் 01-11-2016 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன் பிரதான நிகழ்வாக அன்றைய தினம் காலை சுமார் 6.00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக பாரிய பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு இதில் இலங்கைப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கலந்து கொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் 150வது பொலிஸ் தின நிகழ்வுகள் இடம்பெறும்.
இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட்,அமைச்சர் தயா கமகே,இலங்கைப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணாமலை,கந்தளாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளின் பொலிஸ் உயரதிகாரிகள், ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இங்கு பொலிஸாரின் சேவையை உணர்த்தும் நிகழ்வுகளும்,புறா,பலூன் போன்றவற்றை வானில் பறக்க விடுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.