அபு அலா -
அம்பாறை சம்மாந்துறை பட்டம்பிட்டி நீர்ப் பாசனப் பிரிவின் கீழுள்ள நெய்னாகாடு பிரதேசத்தில் 16 வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முன்னெடுக்கப்படவுள்ளதாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் இன்று (07) தெரிவித்தார்.
சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.றிப்னாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த வேலைத்திட்டங்கள் யாவும் 52,014,000.00 ரூபா நிதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பின்வருமாறு,
பிரதான அணைக்கட்டுக்கு பண்ட் அமைத்தல் - 3,900,000.00
ஆணை விழுந்தான் நீர் வழங்கள் நிர்மாணம் - 1,260,000.00
நெல்லுச்சேனைப் பாலம் மீள் நிர்மாணம் - 1,225,000.00
பட்டம்பிட்டி அணைக்கட்டு இரும்புக் கதவு அமைத்தல் - 1,000,000.00
பட்டம்பிட்டி விடுதியை மீள் நிர்மாணம் செய்தல் - 1,480,000.00
ஓட்டையான்மடு பாதை புனர் நிர்மாணம் - 1,029,000.00
வீரயடி அணைக்கட்டு புனர் நிர்மாணம் - 5,170,000.00
கல்ஓயா ஆறு பண்ட் நிர்மாணம் - 3,240,000.00
வீரயடி ஆறு தோண்டி விரிவாக்கல் - 7,800,000.00
நெல்லுச்சேனை றெகுலேற்றர் நிர்மாணம் - 2,350,000.00
குர்ணல் கஞ்சி அணைக்கட்டு நிர்மாணம் - 8,400,000.00
வெட்டுக்கல் வாய்க்கால் தோண்டுதல் - 700,000.00
பட்டம்பிட்டி அணைக்கட்டு கதவு மீள் நிர்மாணம் - 900,000.00
சேனவட்டை பாதை புனர் நிர்மாணம் - 11,300,000.00
சின்ன விகாரை பாலங்கள் அமைத்தல் - 900,000.00
பட்டம்பிட்டி 7 ஆம் வாய்க்கால் நீர் திசை திருப்பி நிர்மாணித்தல் - 1,000,000.00