ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ மாநாட்டு மண்டபத்தை பராமரிப்பதற்கு மாதாந்தம் 170 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மாநாட்டு மண்டபத்தை பராமரிப்பதற்காக மாதாந்தம் நகர அபிவிருத்தி அதிகாரசபை 170 இலட்சம் ரூபாவினை செலவிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நிதி நகரம் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஹம்பாந்தோட்டையில் அழகான சர்வதேச மாநாட்டு மண்டபம் ஒன்று உருவாக்கப்பட்டள்ளது. இந்த மாநாட்டு மண்டபத்தை நிர்மாணித்ததன் பின்னர் ஒன்றிரண்டு நாட்களே அது பயன்படுத்தப்பட்டுள்ளது.நான் இதனைவிடவும் உதாரணங்ளை சொல்லப் போவதில்லை. மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க வர்த்தக மையம் போன்றன நகர அபிவிருத்தி சபையின் பணத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை எல்லோரும் அறிந்ததேயாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.