20 வருடங்களுக்கு முன் வெளிவந்த புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..!

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்து அது தொடர்பான வாழ்த்துக்களும், இவ்வாரான ஒரு பரீட்சை தேவைதானா என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் எமது பறகஹதெனிய தேசிய பாடசாலையில் இம்முறை 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்ற செய்தியை கேட்ட போது எனது சிந்தனை 20 வருடங்களுக்கு அப்பால் சென்று விட்டது. 20 வருடங்களுக்கு முன் 1996 இதே பாடசாலை இதே ஆசிரியைகள் நஸ்மியா டீச்சர், சபினா டீச்சர் மற்றும் ரவுபா டீச்சர் ஆகிய கண்ணியத்திற்குறிய ஆசிரியைகளிடம் நானும் எனது நண்பர்களும் புலமைப் பரிசில் பரீட்சைக்காக படித்த அந்த நினைவுகள் இன்றும் பசுமரத்தாணி போன்று உள்ளது.

இப்பொழுது உள்ள பாரிய வசதிகள் இல்லாத அந்த காலகட்டத்தில் குறிப்பாக டியுஷன் மாபியா, செமினார் மாபியா என பெற்றோர் பதட்டப்பட்டு, இன்னல்பட்டு, தமக்குல் போட்டி போட்டுக் கொண்டு ஆயிரம் ஆயிரம் ரூபாய்களை வீண்விரயம் செய்யாத காலமது.

11 மாணவர்கள் சித்தி அடைந்து (ஹமீம் நாநா, ஆஷிக் நாநாவுடைய வகுப்பு என்று நினைக்கின்றேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்) சாதனை படைத்திருந்த எமது பாடசாலையின் புதிய சாதனையை எமது வகுப்பு மாணவர்களால் 1996 ஆண்டு 13 மாணவர்கள் சித்தியடைந்து முறியடிக்க முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இச்சாதனை கடந்த 20 வருடங்களாக முறியடிக்கப்படாமல் உள்ளது என்று நினைக்கின்றேன். 20 வருடங்களுக்கு முன் சித்தியடைந்த எமது வகுப்பு மாணவர்களுல் 10 பெண் பிள்ளைகளும் 3 ஆண்களும் அடங்குவர்.

அம்மூவரில் என்னையும் ஒருவனாக எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கிவைத்தான் என்பதனை நினைக்கும் போது மட்டில்லாத மகிழ்சி அல்ஹம்துலில்லாஹ். மற்ற இருவரும் எமது ஊரறிந்த அன்பு நண்பன் டாக்டர் பஸ்லுல் ஹக் மற்றும் அன்பு நண்பன் கணிணி மென்பெருள் துறை பட்டதாரி றிபாஸ் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதைய அதிபராக இருந்த சனூன் அதிபர் அவர்கள் (அல்லாஹ் அவருக்கு சுவனபதியை வழங்க வேண்டும்) எமது பெறுபேறுகள் வெளிவந்த போது பெரும் மகிழ்சி அடைந்தார். நானும் நண்பன் றிபாஸூம் குர்ஆன் மத்ரஸா முடித்து வீட்டுக்கு போகும் வழியில் புலமை பரிசில் பெறுபேறுகள் வந்துள்ளதாக கேள்விப்பட்டோம். நேராக அதிபரின் வீட்டுக்கு சென்றோம். செல்லும் வழியில் றிபாஸ் நீங்க பாஸ், றிஸ்கான் நீங்களும் பாஸ் என்று சிலர் சொல்கின்றனர். அதிபரின் வீட்டை அடைந்ததும் அதிபர் சனூன் அவர்கள் எம்மிருவரையும் ஆரத்தழுவி எம்மை அவரது இருகைகளாலும் தூக்கிக் கொண்ட அந்த வினாடிகள் இன்னும் மறக்கவில்லை.... எல்லாம் வல்ல அல்லாஹ் எமது கல்விக்கண்ணை திறப்பதற்கு பாடுபட்ட எனது தந்தை (அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக) என்றும் எனது கல்விக்காக பாடுபடும் எனது அன்பு தாய் மற்றும் அனைத்து அசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கும் ரஹ்மத் செய்ய வேண்டும்.

றிஸ்கான் முஸ்தீன், 
அல் கப்ஜி, 
சவுதி அரேபியா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -