எம்.எஸ்.எம். ஸாகிர்-
ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தினால் கொழும்பு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கராத்தே வீரர்களை தெரிவு செய்யும் போட்டி கடந்த 1ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இதில் சொட்டோகான் கராத்தே தோ கியார் யொகு காய் அமைப்பு சார்பாக போட்டியிட்டு 04 பேர் முதல் இடத்தையும் ஒருவர் 2ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
21 வயதுக்கு மேற்பட்ட ஊதா பட்டி பிரிவில் 1 கியூ ஏ.ஆர்.எம். றிபாஸ் முதலாம் இடத்தையும், 21 வயதுக்கு மேற்பட்ட கருப்புப் பட்டி பிரிவில் டீ.எம் பாஹிம் முதலாம் இடத்தையும், 21 வயதுக்கு மேற்பட்ட கருப்புப்பட்டி பிரிவில் முஆத் சாபி முதலாம் இடத்தையும் மற்றும் 13 வயது கியூ ஊதா பட்டிப் பிரிவில் சாஹிட் பின் றசீட் முதலாம் இடத்தையும், 18வயதுக்கு மேற்பட்ட கபிலப் பட்டி பிரிவில் எம். பைஸான் ஹனீபா இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
அமைப்பின் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான சென்சே எம்.பீ.எம். கடாபி மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்களுடன் நிற்பதையும் படங்களில் காணலாம்.