2020அம் ஆண்டின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிக்கப் போவது கோத்தபாய ராஜபக்சவே???

2020அம் ஆண்டின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிக்கப் போவது முன்னாள் பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவே என பிரபல சிங்கள சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று சோதிடர் கூறிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களிலும் சிங்கள ஊடகங்களிலும் வேகமாக பரவிவருகின்றது. மேலும் கோத்தபாய, சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரான லெனிலின் கிரகபலனையே கொண்டிருப்பதாகவும் இருவரின் இராசியும் ரிஷபராசியே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய என்பவர் நாட்டை யுத்தத்தில் இருந்து காத்தவர் இராணுவ செல்வாக்கும் மக்கள் செல்வாக்கும் அதிகமாக உள்ளவர். அவர் மஹிந்தவை விடவும் சக்தி மிக்க ஒருவர்.எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிடா விட்டால் மட்டுமே ஏனைய ஒருவர் வெற்றி பெற முடியும். கோத்தபாயவின் கிரகபலன் அத்தகைய சக்தியை கொண்டுள்ளது எனவும் குறித்த சோதிடர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்தக்கருத்து வேகமாக பரவி வரும் வேளையில் நீண்ட காலம் அமைதியாக இருந்த கோத்தபாய தற்போது மக்கள் செல்வாக்கு தேடிவருகின்றார். அதே சயமம் மஹிந்தவுடன் முரண்பட்டு வருகின்றார் என்றும் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -