அபு அலா -
கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள வீடமைப்பு திணைக்களத்தினால் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வீடு கட்ட வசதியற்று வாழும் 35 வறிய குடும்பங்களுக்கு வீடமைத்துக்கொள்வதற்கான முதற்கட்ட காசோலைகள் நேற்று (07) வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் ஆகியோரினால் இந்த காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வீடுகள் கட்டுவதற்கான காசோலைகள் மூன்று கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாகவும், இவைகள் இவ்வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.