மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புக்கு அமைய இரத்தினபுரி மாவட்டத்தில் 10 தோட்டங்களை சேர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் 3.8 மில்லியன் பெறுமதியான கூரைத் தகடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (15-10-2016) அன்று இரத்தினபுரி பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேலும் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வேண்டுகோளின்; பெயரில் சமூக வழுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில 37 சக்கர நாற்காலிகளும் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் மூலம் இலவசமாக 59 தோட்டங்களை சேர்ந்த பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு மருந்து பொருட்களும் இந்நிகழ்வின் போது இலவசமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வி;ல் அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார், சுப்பையா கமலதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.