அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்திலுள்ள விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு முதன்முறையாக 47 மில்லியன் ரூபா தனது வேண்டுகோளிக்கினங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளுருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளிற்கிணங்க விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸினால் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தோப்பூர் பிரதேசத்திலுள்ள கட்சியின் மேம்பாடு தொடர்பாக இளைஞர்களுடனான சந்திப்பில் நேற்று (03) ம் திகதி மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பின்வரும் பிரதேச விளையாட்டு மைதானங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தளாய் பிரதேசத்திலுள்ள நூர் முகம்மட் விளையாட்டு மைதானத்திக்கு 10 இலச்சம் ரூபாயும். தம்பலகாமம் பிரதேச அஸ்-ஷம்ஸ் மைதானத்திக்கு 20 இலச்சம் ரூபாயும்
பாத்திமா விளையாட்டு மைதானத்திக்கு 20 இலச்சம் ரூபாயும் .மீரா நகர் விளையாட்டு மைதானத்திக்கு 10 இலச்சமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு கிண்ணியா காக்காமுணை விளையாட்டு மைதானத்திக்கு 20 இலச்சமும் அல் இர்பான் மைதானத்திக்கு 20 இலச்சமும் அடப்பனார் வயல் விளையாட்டு மைதானத்திக்கு 10 இலச்சமும் எழிலரங்கு விளையாட்டு மைதானத்திக்கு தொடர்ச்சியான அபிவிருத்திக்கு 60 இலச்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
குச்சவெளி பிரதேசத்திலுள்ள அந்நூரியா விளையாட்டு மைதானத்திக்கு 35 இலச்சமும் இறக்கக்கண்டி அல்-ஹம்றா விளையாட்டு மைதானத்திக்கு 20 இலச்சம் ரூபாயும் புடவைக்கட்டு மைதானத்திற்கு 15 இலச்சம் ரூபாயும் புல்மோட்டை அரபாத் மைதானத்திக்கு 30 இலச்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசத்திலுள்ள
ஜமாலியா விளையாட்டு மைதானத்திக்கு 10 இலச்சம் ரூபாயும் நாச்சிக்குடா விளையாட்டு மைதானத்திக்கு 15 இலச்சமும் வெள்ளை மணல் சின்னம்பிள்ளைச் சேனை மைதானத்திக்கு 15 இலச்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மூதூர் பிரதேசத்திலுள்ள பாயும் மீன்கள் மைதானத்திக்கு 10 இலச்சம் ரூபாயும் பொது மைதானத்திக்கு 30 இலச்சம் ரூபாயும் நெய்தல் நகர் விளையாட்டு மைதானத்திக்கு 15 இலச்சமும் கேணிக்காடு ரேண்ஜர்ஸ் மைதானத்திக்கு 10 இலச்சம் ரூபாயும் பால நகர் விளையாட்டு மைதானத்திக்கு 15 இலச்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்திக்கு 10 இலச்சம் ரூயாயும் பொது விளையாட்டு மைதானத்திக்கு 30 இலச்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு பதவிசிறிபுர .வெருகல் ஆகிய விளையாட்டு மைதானங்களுக்கு முறையே 15-15 இலச்சங்களும் சேறுவில மைதானத்திற்கு 20 இலச்சமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மேலும் குறிப்பிட்டார். இதன்மூலம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் .பாடசாலை மாணவர்கள் விளையாட்டுத்துறையில் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.