எந்தவொரு பரீட்சை முடிவுகளும் ஒரு பிள்ளையின் ஒட்டுமொத்த வாழ்வின் நன்மை, தீமையை தீர்மானிப்பதில்லை! பரீட்சைகள் வெறும் வெற்றி, தோல்விகளை மட்டுமே நிர்ணயிக்கின்றன! வாழ்வின் வெற்றி என்பது இறைவன் கைகளில் உள்ளது! எத்தனையோ பரீட்சைகளில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோல்வியை தழுவியிருக்கின்ற வரலாறுகளை கண்கூடாக காண்கின்றோம்!
ஒரு பரீட்சையின் முடிவை மட்டும் வைத்து பிள்ளைகளை நச்சரிப்பதோ, துன்புறுத்துவதோ அறிவார்ந்த செயலாகாது! 5 ஆம் தரத்தில் வெற்றிபெற்ற பிள்ளை உயர் தர பரீட்சையில் தோற்பதும், 5 ஆம் தரத்தில் தோற்ற பிள்ளை உயர்தரத்தில் வெற்றி பெறுவதும் வரலாறுகள்! எனவே பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் மிகுந்த அவதானமாய் இருத்தல் வேண்டும்!
மென்மேலும் நம்பிக்கை ஊட்ட வேண்டும்! மாறாக மனம்தளர செய்து பிள்ளைகளை அதிகமாகச் சிந்திக்க வைத்து மனநோய் ஏற்பட காரணமாய் அமைந்து விடக்கூடாது! என்பதனைக் கேட்டுக்கொள்கிறேன்.