கொழும்பு டி. எஸ் சோனாநாயக்கா கல்லுாாியின் 50 வது ஆண்டு வாணி விழா..!

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு டி. எஸ் சோனாநாயக்கா கல்லுாாியின் தமிழ் மொழி மூலமான மாணவா்களின் ஹிந்து மன்றத்தின் வருடாந்தம் நடாத்தி வரும் 50 வது ஆண்டு வாணி விழா நேற்று (8) கல்லுாாியின் அலஸ் மண்டபத்தில் கல்லுாாியின் அதிபா் ஆர்.எம். ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு அமைச்சா் மனோ கனேசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். கல்லுாாியின் தமிழ் பிரிவு உப அதிபா் திருமதி .யே. சிவபாலன், பொருப்பாசிரியா் எஸ். ஜெயரட்ணம், மற்றும் திருமதி என்.எம் அமீன் இந்து மன்றத்தின் தலைவா் கை. சயந்தன் ஆகியோறும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பிரதம அதிதியினால் பதக்கமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது. மாணவா்களது தமிழ் கலை நிகழ்ச்சிகளும் மேடை ஏற்றப்பட்டது.

இங்கு உரையாற்றிய அமைச்சா் மனோ கனேசன்:-

இந்த நாட்டில் சுத்ந்திரம் பெற்றுக் கொடுத்த டி.எஸ். சோநாயக்கக அவா்கள் அன்று சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு ஒரு வாரத்தின் பின் சுதந்திர உரையில் - இந்த நாடு ஒரு பல்லிணம் கொண்ட ஒரு நாடு மூன்று மொழிகள், நான்கு மதங்கள், அவா்கள் கலை கலாச்சாரம், மத விழுமியங்களுக்கு நாம் மதிப்பளித்து வாழ்ந்தால் இந்த நாடு உலகில் பல்வேறு நாடுகளின் முன்னுதாரமாகக் கொண்டு சிறந்து விளங்கும் என கூறியிருந்தாா். 

அவரின் பெயரைக் கொண்டு இயங்கும் இப்பாடசாலை தலைநகரிலிலேயே பௌத்தம், முஸ்லீம், ஹிந்து கிருஸ்த்தவ மாணாவ சமுகத்தினா் 7000 பேர் கல்வி கற்கும் ஒரு பாடசாலையாகும், பல்லிண சமுகத்தினைப் பிரதிபலிப்பாக 4 மத ஸ்தலங்களும் இந்தப் பாடசாலையில் புமியில் நிறுவப்பட்டுள்ளன. சகல இன மாணவா்களும் இங்கு இருந்து தமது சகோதர மதத்திற்கு கலை, கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க பாடசாலைப்பருவத்தில் இருந்தே இங்கு கற்கின்றனா். இது இந்த நாட்டில் ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு முன்மாதிரியானதாகும். 

இந்த நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில் பல்லிண மக்களது கலை, கலா்சாரம் மொழிகள் சகல மக்களும் சம்புரணமாக நடைமுறைப்படுத்துவதற்கே நாம் பல அரசியல் முன் நகா்வுகளை செயல்படுத்துவதற்கு பல கலந்துரையாடல்களை பிரதமா் தலைமையில் ஆராய்ந்து வருகின்றோம். அன்று டி.எஸ். சேனநாயக்க சொல்லிய வாத்தைகளை இந்த அரசாங்கம் செயல்படுத்துவதற்கு முற்பட்டு வருகின்றது என அமைச்சா் மனோ அங்கு உரையாற்றினாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -