அபு அலா -
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வறுமை மற்றும் விதவைகள், வீட்டு வசதியற்றவர்கள் என்று வாழும் சுமார் 56 பயனாளிகளுக்கு தலா 10 சீமெந்து மூடைகள் குறித்த பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தில், பயனாளிகளுக்கான சீமெந்து பேக்குகளை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம், பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.