எம்.வை.அமீர்-
ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட பிரிவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், இணைந்து கடந்த 2015 ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து நடாத்திய “இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிக்கான பயிற்சித் திட்டத்தில்”கலந்து பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2016-10-20ஆம் திகதி தென்கிழக்குப்பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம். எஸ்.எம். ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம். எம். எம். நாஜீமும் விஷேட அதிதியாக ஆளுகை மற்றும் திறன் அபிவிருத்தித் துறைக்கான நிபுணர் றாமையா தனராஜ் கலந்துகொண்டதுடன் UNDPயின் நிகழ்ச்சி நிபுணர் றாஜிந்தர ரோஹித வேலிஹிண்டகே, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன், இறக்காமம் பிரதேசசெயலாளர் எம்.எம்.எம். நஸீர், நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ்.கரன், பொத்துவில் பிரதேச செயலாளர் என். எம்.முஹம்மத் முஸர்ரத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் மன்சூர், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ் ஜகராஜன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
சம்மாந்துறை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகங்களில் இடம்பெற்ற மேற்படி பயிற்சி வகுப்புகளில் 98 பங்குபற்றுனர்கள் பயிற்சிகளில் பங்குபற்றியிருந்தனர்.
சான்றிதழ்கள்; வழங்கிய இந்நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், முன்னாள் தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சி.சல்பியா உம்மா மற்றும் உதவிப் பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.