இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் காதலி யார் என 9ம் வகுப்புத் தேர்வில் கேள்வி கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது மகாராஷ்டிர பள்ளி ஒன்று. இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோஹ்லி. இவரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர் என்பது ஊரறிந்த ரகசியம்.
இந்நிலையில், மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக மகாராஷ்டிர மாநிலம் பிவாதியில் உள்ள பள்ளி ஒன்று தேர்வில் கேள்வி பிரச்சினையில் சிக்கியுள்ளது. அதாவது பிவாதியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 13ம் தேதி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பி.இ.டி. தேர்வு நடத்தியது. அந்தத் தேர்வில், 'விராட் கோஹ்லியின் காதலி யார்?' என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு மூன்று பெயர்களை ஆப்ஷனாகவும் வழங்கியுள்ளது. அதில், முதல் ஆப்ஷனாக நடிகை பிரியங்கா பெயரும், இரண்டாவது ஆப்ஷனாக அனுஷ்கா பெயரும், மூன்றாவது ஆப்ஷனாக தீபிகா பெயரும் இருந்தது. மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தேவையான எத்தனையோ கேள்விகள் இருக்க, இப்படி ஒரு கேள்வியை பள்ளி நிர்வாகம் கேட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.