9 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தின் காரணமாக குறித்த சிறுமியின் சகோதரர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திம்புளை காவற்துறையினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹட்டன் நீதவான் நீதமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சிறுமியின் சகோதரர் மற்றும் அவரது இரு நண்பர்களும் இணைந்தே பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அறியவந்துள்ளது.
பாட்டியின் வளர்ப்பில் சிறுமி வளர்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் திம்புளை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.