கிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்வதுடன் கிழக்கில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இளைஞர் படையணியினால் ஆரம்பமான “ஈஸ்ட் யூத் பவுண்டேடன்” அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு வரும் மாதாம் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் நடாத்தவிருக்கின்றது.
புகைப்படக் கருவியின் தொழிற்பாடுகள் மற்றும் பாகங்கள், புகைப்பட ஒளியியல், மற்றும் நுணுக்கங்கள், போன்ற பல விடயங்களை இச்செயலமர்வு உள்ளடக்கியதால் ஆர்வமுள்ளவர்கள் முற்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
செயலமர்வு யாவும் பிரபல புகைப்பட கலைஞர்களால் நடாத்தப்படும்
குறித்த செயலமர்வுக்கான கட்டணமாக 500/=வும், அறவிடப்படவுள்ளதுடன் இடம் மற்றும் ஏனைய விடையங்களை தொலைபேசி மூலமாக அறிவிப்பு செய்யப்படும் எனபதையும் அறியத்தருகின்றோம்.
இறுதித்திகதி 2016.11.31
பதிவு செய்து கொள்ள-->>