பாலமுனை ட்றைஸ்டாரின் மெக்டோன் சவால் கிண்ணம் - சம்பியனாக அக்கரைப்பற்று BBBஅணி



பாலமுனை அய்ஷத்-

பாலமுனை TriStar விளையாட்டுக் கழகம் நடாத்தி வந்த McDone Champion Trophy-2016 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் சனிக்கிழமை (2016.10.22) மாலை 3.30 மணியளவில் ட்றைஸ்டார் அணியின் தலைவர் MHM. ஜெஸ்பர் MA (SLPA) அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

இறுதிப் போட்டியில் பாலமுனை சுப்பர் ஓகிட் மற்றும் அக்கரைப்பற்று BBB அணிகள் மோதியதில் அக்கரைப்பற்று BBB அணி வெற்றி பெற்று சம்பியனானது. இப்போட்டியில் கலந்து கொண்ட அணிகளுக்கு பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக ட்ரைஸ்டார் விளையாட்டுக்கழக முன்னால் தலைவரும் தற்போதைய ஆலோசகரும் கலைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் தவிசாளருமான சட்டத்தரணி MA அன்சில் (LLB), ஆலோசகரும் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளருமாகிய MM முஸம்மில், ஆலோசகரும் மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபருமான KL.உபைதுல்லாஹ், ஆலோசகரும் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளருமாகிய அல்ஹாஜ் SHM இப்றாஹிம், ஆலோசகரும் கிராம சேவகருமான MSM.இப்றாஹிம், ட்ரைஸ்டார் விளையாட்டுக்கழக ஆலோசகரும் HNB வங்கி உத்தியோகத்தருமான MA.சதாத் ஆகியோரும் மற்றும் ட்ரைஸ்டார் விளையாட்டுக்கழக சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பலதுறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்தியோரை பாராட்டி கௌரவித்ததோடு நினைவுப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

பாலமுனை ட்றைஸ்டார் விளையாட்டுக்கழக செயளாளரான எம்.எப். பர்ஹான் இலங்கை கணக்காளர் சேவைப் பரிட்சையில் சித்தி பெற்று மண்ணுக்கும் கழகத்துக்கும் பெருமை சேர்த்தமைக்காக பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

மேலும் மாகண மட்ட எல்லே,கபடி, ஹொக்கி போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற ட்றைஸ்டார் அணி வீரர்களான ஐ.எல்.எம். பாயிஸ் ஆசிரியர், ஆர்.எம்.சாமில்,எம்.எம்.சாஜின்,கே.ஆர்.எம்.கியாஸ், எம்.எம்.நியாஸ் ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

அத்தோடு பாடசாலை மட்ட போட்டியில் தன் திறமைகளை வெளிப்படுத்தி (army pool) பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்றைஸ்டாரின் இளம் வீரர் எம்.எம்.சனூஸ் உம் கெளரவம் பெற்றார்.

McDone வெற்றிக் கிண்ண வெற்றியாளர்கள் பின்வருமாறு..

*சம்பியன்- அக்கரைப்பற்று BBB அணி
*2ம் இடம்- பாலமுனை சுப்பர் ஓகிட் வி்க.
*சிறப்பாட்டக்காரர்- BBB யின் அஷ்மத்
*தொடராட்டக்காரர்-பாலமுனை மெறொன்ஸ் கழக வீரர்-பாரி
*சிறந்த பந்து வீச்சாளர்- ட்றைஸ்டாரின் ஆசிக்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -