இலங்கையின் தனியார் உயர்கல்வித்துறையில் சிறப்பு மிக்க உயர் கல்வி நிறுவனமாகத் திகழும் BCAS Campus தொழில் நுட்ப மற்றும் உயர் கல்விக் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்து கடந்த மூன்று தினங்களாக மிகவும் சிறப்பாக நடாத்தி வருகின்றது.
கடந்த மூன்று தினங்களாக நடாத்தப்பட்டு வரும் BCAS Expo -2016 என்ற இந்த விசேட கண்காட்சி இன்று 22.10.2016 மாலை 06.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இல: 54 காலிவீதி. கல்கிஸ்ஸை (Mt.Lavinia) இல் அமைந்துள்ள BCAS Campus வளாகத்தில் காலை 09.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை நடைபெற்றுவரும் BCAS Expo -2016 கண்காட்சிக்கான அனுமதி முற்றிலும் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல். கணினி மற்றும் உயிரியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வரும் BCAS Campus தனது மாணவர்களினால் உருவாக்கப்பட்ட புதுமையும், சுவாரஸ்யமும் நிறைந்த பல்வேறு தொழில் நுட்ப அம்சங்களை ( Innovative Technologies and Student projects) இதில் காட்சிப்படுத்தியுள்ளது.
அத்தோடு உயிரியில் விஞ்ஞானத்துறை மாணவர்களின் விசேட செயற்திட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
BCAS Expo -2016 எனும் இந்த உயர் கல்விக் கண்காட்சியை கண்டுகளிப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளானமாணவர்கள் தினமும் ஆர்வத்துடன் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.