சர்வதேச சிறுவர் தினத்தை காத்தான்குடியில் சிறப்பித்த இம்போட்மிரர் குழுமத்தினர் - படங்கள்

ர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இம்போட் மிரர் ஊடக வலையமைப்புக் குழுமத்தினர் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஒரு முழுநாள் நிகழ்வாக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

சிறுவர்களுக்கான விளையாட்டு, பொது அறிவுப்போட்டிகள், பாடல் நிகழ்வுகளுடன், பணப்பரிசில்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் முஸ்தபா ஆசிரியரின் வில்லுப்பாட்டு மற்றும் இம்போட்மிரரின் உறுப்பினரும் வசந்தம் டீவியின் வாங்க பழகலாம் புகழ் நஜாதின் "மிமிக்கிரி" என்பவற்றுடன் அதிதிகளான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆகியோரின் உரையுடன், ஊடகவியளாலர் எம்.எஸ்.நூர்தீன், விடுதி முகாமையாளர் கலீல் ஹாஜி ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் ஹாஜி ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.

சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பாடசாலைப் பை வழங்கப்பட்டதுடன் சிறுவர் இல்லத்துக்குத் தேவையான மின்ழுத்தி உபகரணமும் பணிப்பாளர் எம்.வை.அமீர் மற்றும் நிருவாக பணிப்பாளர் எம்.எஸ்.சியாமுடன் நிருவாக குழுமத்தினர்களான றிஷ்லி சம்சாட், சப்னி அஹமட், ஏ.ஆர்.எம்.நெளஷாத், ஜெ.அஷாஹிம், எம்.ஐ.சியாத். ஜீ.றிஸ்வான், அமீர் மெளலவி,ஹமீட், நஜாத், ஆகிப், நாஸிறூன், இஜாஸ்,  இமாத், ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வு முழு நேரமாக குறிப்பிட்ட இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களுடன் இம்போட்மிரர் நிருவாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் சந்தோஷத்துடன் கலந்து கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ் நிகழ்வுகள் யாவும் இம்போட் மிரர் முகநூல் பக்கத்திலும் சிகரம் சர்வதேச இணைய வானொலியிலும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இதன்போது அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்படத்தக்கதாகும்..
























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -