பொத்துவில் தாஜகான்-
பொத்துவில் பிரதேசத்தின் விவசாயத்தினை விருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பல்வேறு அபிவிருத்திகள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் பொத்துவில் விவசாயிகளின் நன்மை கருதி நீர்ப்பாசனத்திற்கான சிறு குளங்கள் அபிவிருத்தித் திட்டத்திற்கு பெருந்தொகை நிதிகள் ஒதுக்கப்பட்டு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
உடகோவை 75 ஏக்கர் நெற்செய்கைக்கான நீர்ப்பாசன குளத்திற்காக 16 லட்சம் 90 ஆயிரம் ரூபாய், மதுரம்வெளி 145 ஏக்கர் நெற்செய்கைக்காக 16 இலட்சம் குளத்திற்கும் 10 இலட்சம் வீதி அபிவிருத்திக்கும், வட்டிவெளிக் குளத்துக்கு 20 இலட்சம்,கடியாம்பழம் குளத்திற்கு 20 இலட்சம் கிரான்கோவை குளத்திற்கு 10 இலட்சம், வான் கதவுக்கு12.5 இலட்சம், கிரான்கோவை சின்னக்குளத்திற்கு 20 இலட்சம் நிதிகள் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிதியானது கமநல சேவைத் திணைக்களத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு கமக்கார அமைப்பினால் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதனை பார்வையிடுவதற்காக வேண்டி விவசாயப் போடிமார்களுடன் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.அப்தல் றகீம் விஜயம் செய்து வேலைத்தளங்களை பார்வையிட்டார்.