சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலை ஒன்றில் ஒரு ஆண் உள்பட இரண்டு இளம்பெண்கள் நிர்வாணமாக ஓடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு நேரத்தில் Bundesgasse பகுதியில் வாலிபர் ஒருவர் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது, திடீரென இரண்டு பெண்களும் ஒரு ஆணும் சாலையில் ஓடியுள்ளனர். காரில் இருந்த வாலிபர் கூர்மையாக கவனித்தபோது மூவரும் முழு நிர்வாணமாக ஓடியதை கண்டு அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சில மீற்றர் தூரம் ஓடியபோது இரு பெண்களில் ஒருவர் திடீரென கீழே விழுந்து பிறகு எழுந்து ஓடியுள்ளார். இக்காட்சியை கண்டு வாலிபர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால், சம்பவ இடத்திற்கு வந்தபோது மூவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் பேசியபோது, நண்பர்கள் மத்தியில் சவாலிற்காக அவர்கள் நிர்வாணமாக சாலையில் ஓடியிருக்கலாம். அல்லது, அளவுக்கதிகமாக போதை மருந்தை எடுத்துக்கொண்டதால் நிதானமின்றி நிர்வாணமாக மூவரும் ஓடியிருக்கலாம் என பொலிசார் சந்தேகத்துள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் மூவர் நிர்வாணமாக ஓடிய இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.