பாலம் உடைந்து காணப்படுவதால் மக்கள் சிரமம்..!

க.கிஷாந்தன்-
க்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்லெக் தோட்டத்தில் 230 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதுடன் இங்கு 800 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தோட்டத்திற்கு செல்வதாக இருந்தால் ஆகுரோயா ஆற்றினை கடந்தே செல்லவேண்டும்.

ஆற்றினை கடந்து செல்வதற்கு 75 வருடங்களுக்கு முன்பு மரப்பாலத்தினை இத்தோட்ட மக்கள் பயன்ப்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுக்கும் போது பாலம் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்படும்.

இதன் போது இவர்கள் போக்குவரத்து செய்யமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இம்மக்களின் நலன் கருதி 30 வருடங்களுக்கு முன்பு இரும்பு பாலம் அமைத்து கொடுக்கப்பட்டது. இப்பாலம் மிகவும் சிறிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மழைக்காலங்களில் இப்பாலமும் வெள்ளத்தால் மூழ்கிவிடும்.

தற்போது இப்பாலம் உடைந்த நிலையில் காணப்படுவதால் பாலம் எந்த நேரத்திலும் உடைந்து விழ கூடும் என்ற அச்சத்தில் இவர்கள் பயணத்தினை தொடர்வதாக இங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக இத்தோட்ட மக்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்காக மன்றாசி அல்லது ஹோல்புறூக் நகரங்களுக்கு செல்லவேண்டும்.

பாலம் உடைந்து காணப்படுவதால் சுமார் 06 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பாதையின் ஊடாக பயணிக்க வேண்டும். இத்தோட்ட மக்கள் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு செல்வதாகயிருந்தால் இப்பாலத்தின் ஊடாக 30 நிமிடங்களில் செல்வதாகவும் பாலம் உடைந்துயிருப்பதன் காரணமாக ஒரு மணி நேரம் தேவைப்படுவதாகவும் போக்குவரத்திற்கு அதிக பணம் செலவு செய்யவேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பாலத்தினை உடனடியாக செய்து தருவதாக வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்ற தலைவர்கள் தற்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை தேர்தல் காலத்தில் பலர் அடிக்கடி பாலத்தினை பார்வையிட வந்ததாகவும் தற்போது எவறும் கவணிப்பாரற்ற நிலையில் பாலம் உள்ளதாக தெரிவிக்கும் இவர்கள் மலையக அரசியல் வாதிகள் உடனடியாக இப்பாலத்தினை புணரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -