புத்தக அரங்கம் ஒன்றில் மிக கேவலமாக கமென்ட் அடித்தவனுக்கு பளார் விட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். லட்சுமி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பண்ணிக்கொண்டிருக்கும் போதே இவர் பற்றி மனசாட்சியே இல்லாமல் தப்பும் தவறுமாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பினார்கள்.
ஒரு நடிகரோடு இணைத்து பேசினார்கள். அவ்வப்போது பதிலடி கொடுத்தார் லட்சுமி. சமீபத்தில் ஒரு புத்தக விழா திருச்சியில் நடந்தது. அப்போது ஒரு இளைஞர் லட்சுமி காது படவே நாக்கூசும் படி பேச, சட்டென்று திரும்பிய லட்சுமி அவரின் சட்டையைப் பிடித்து இழுத்து பளார் என்று ஒன்று விட்டாராம்.
நாயே நடிகைன்னா உனக்கு அவ்வளவு கேவலமா..! நான் எப்படி இருந்தா உனகென்னடா..போய் உன் குடும்பத்தை பாரு..என்று வெடிக்க, கூடி இருந்த மக்களும் அந்த இளைஞரை கண்டித்து அனுப்பினார்களாம்..!