ஆதிப் அஹமட்-
ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள மண்முனை மீள் குடியேற்ற கிராமத்துக்கு குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (12.10.2016) மண்முனை ஜும்மா பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்றது. நகர திட்டமில் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம முகாமையாளர் பொறியியலாளர் பிரகாஸ், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஆரையம்பதி பிரதேச பொறுப்பதிகாரி பொறியியலாளர் ஷமட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மண்முனை கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளர் முபீனின் வேண்டுகோளின் பேரில் பாலமுனை, ஒல்லிக்குளம் சமாதன கிராமம், மதுராபுரம், ஆரையம்பதி செல்வா நகர், தாழங்குடா போன்ற பிரதேசங்களில் நீர்க்குழாய்கள் பொருத்துகின்ற வேலைகள் முடிவுற்று குடிநீர் மக்களின் பாவனைக்காக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பூநொச்சிமுனை பச்சை வீட்டுத்திட்டம், நாவற்குடா, பத்தொன்பதாம் வட்டாரம், கல்லடி, இருதயபுரம், உன்னிச்சை ஆகிய கிராமங்களுக்கான குடிநீர் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.