கோப்குழு அறிக்கை நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றியாகும் - இம்ரான் மஹ்ரூப்

எப்.முபாரக்-
வெள்ளிகிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட கோப் அறிக்கை நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என ஐக்கிய தேசிய கட்சி பாரளமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். இன்று திங்கள்கிழமை (31) காலை கிண்ணியாவிலுள்ளபாராளுமன்ற உறுப்பினரின் அலுவகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வெள்ளிகிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட கோப் அறிக்கை எமது நல்லாட்சி அரசுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும் அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் இதுதொடர்பான விவாதங்கள் நடைபெறும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் கோப் அறிக்கையை அடிப்படையாக கொண்டு ஐக்கியதேசிய கட்சி மீது சேறுபூச நினைத்தவர்களுக்கு இன்று வெறும் ஏமாற்றமே மிஞ்சியது திருடர்களை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

கடந்த அரசாங்கமும் கோப் குழுவை நியமித்திருந்தது ஆனால் அந்த கோப் குழுவின் அறிக்கைகள் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டிருந்தன இன்று எமது கட்சியின் மீது சேறு பூச முயற்சிக்கும் கூட்டுதிர்கட்சியினர் அவர்களின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது என மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் இக் கோப் அறிக்கை வெளியிடுவதில் காட்டிய அக்கறையையும் ஒத்துழைப்பையும் கூட்டு எதிர்கட்சியினர் நிதி மோசடிப்பிரிவின் விசாரணைகளில் கட்ட வேண்டும்.

கடந்த காலங்களில் கொள்ளையர்களின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமான எமது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் எமது அரசு ஈடுபட்டுள்ளது இந்நடவடிக்கைகளுக்கு பொதுமக்களாகிய உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் எதிர்வரும் காலங்களில் உங்கள் ஒத்துழைப்போடு வளமான இலங்கையை நாங்கள் உருவாக்கி காட்டுவோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -